நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தை கச்சா எண் ணெய் விலை நிலவரத்தை காரணம்காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையால் மக்களும் வாகனஓட்டிகளும் கடும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.25ஆகவும், டீசல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.37 காசுகளாகவும் விற்கப்படுகிறது.